/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கார், பைக் சாகசம்; மக்கள் ஆச்சர்யம்
/
கார், பைக் சாகசம்; மக்கள் ஆச்சர்யம்
ADDED : மார் 17, 2025 05:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர், முதலிபாளையம் நிப்ட்-டீ பேஷன் கல்லுாரியில், கார் மற்றும் பைக் ஷோ நடந்தது. கல்லுாரி ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி துவக்கிவைத்தார். கல்லுாரி முதல்வர் கோபாலகிருஷ்ணன், நிர்வாக அதிகாரி மகேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பி.எம்.டபிள்யு., மினி கூப்பர், டார் ஜீப் உள்பட அதிக திறன் மிக்க 21 கார்கள்; 25 பைக்களின் சாகசங்கள் நடைபெற்றது. கோவையை சேர்ந்த பயிற்சிபெற்ற ஆண், பெண் ஓட்டுனர்கள் பங்கேற்று, கார் மற்றும் பைக்கிங் வீலிங், சாகசங்கள் செய்தனர்.
மைதானத்தில், புழுதி பறக்க கார்கள் நடத்திய சாகசங்களை கல்லுாரி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆச்சர்யத்தோடு பார்த்தனர்.