/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டில்லியில் கார் குண்டு வெடிப்பு: மாவட்டத்தில் தீவிர சோதனை
/
டில்லியில் கார் குண்டு வெடிப்பு: மாவட்டத்தில் தீவிர சோதனை
டில்லியில் கார் குண்டு வெடிப்பு: மாவட்டத்தில் தீவிர சோதனை
டில்லியில் கார் குண்டு வெடிப்பு: மாவட்டத்தில் தீவிர சோதனை
ADDED : நவ 14, 2025 12:15 AM

திருப்பூர்: டில்லியில் குண்டு வெடிப்பு எதிரொலியாக மாவட்டம் முழுதும் கோவில், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன்களில் மாவட்ட போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
நம் நாட்டின் தலைநகர் டில்லியில் செங்கோட்டை, மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன் அருகே கார் குண்டு வெடிப்பு சில நாட்கள் முன் நடந்தது. இதன் எதிரொலியாக, தமிழக போலீசார் உஷார்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக போலீசார் இரவு நேரத்தில் தீவிர வாகன தணிக்கை செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் எஸ்.பி. கிரிஷ் அசோக் யாதவ் உத்தரவின் பேரில், மாவட்ட போலீசாருக்கு கட்டுப்பட்ட அவிநாசி, பல்லடம், தாராபுரம், காங்கயம், உடுமலை ஆகிய சப்-டிவிஷன்களில் போலீசார் வழிபாட்டு தலம், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன்களில் போலீசார் சோதனை செய்தனர். கோவில், ரயில்வே ஸ்டேஷன்களில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் அடங்கிய குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.