ADDED : டிச 11, 2025 04:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரத்தை சேர்ந்தவர் ஆனந்தன். காரில் கோவை பீளமேட்டில் உள்ள ஆட்டோ ஷோரூமுக்கு சென்று கொண்டிருந்தார்.
உடன் நண்பர்கள் ஹாஜிகாதர், 30, காளிதாஸ், 31 ஆகியோர் சென்றனர். கார் சூரிய நல்லுார், காதபுள்ளப்பட்டி சுங்கசாவடியை அடைந்த போது, திடீரென காரில் இருந்து கரும்புகை வெளியேறியது.
உடனே, காரை ரோட்டோரம் நிறுத்தி, மூன்று பேரும் வெளியேறினர். சில நிமிடங்களில் கார் முழுதும் தீப்பிடித்து எரிந்தது.
தகவலறிந்து சென்ற தாராபுரம் தீயணைப்பு வீரர்கள் காரை அணைத்தனர். குண்டடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

