/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கட்டுப்பாட்டை இழந்து பூக்கடைக்குள் புகுந்த கார்
/
கட்டுப்பாட்டை இழந்து பூக்கடைக்குள் புகுந்த கார்
ADDED : ஜன 02, 2025 11:18 PM

அவிநாசி: நீலகிரி மாவட்டம், தேவர் சோலை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன், 55. விவசாயி. மனைவி மற்றும் மகனுடன் கூடலுாரில் இருந்து ஈரோடு அருகே உள்ள பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் வழிபட நேற்று காலை தனது காரில் வந்து கொண்டிருந்தார்.
அவிநாசி, சேவூர் ரோடு சந்திப்பில் உள்ள சிக்னலுக்காக காத்திருந்தது. சிக்னல் முடிந்தும் காரை எடுக்காததால் பின்னால் நின்றிருந்த வாகன ஓட்டிகள் சிக்னல் விழுந்ததை அடுத்து பலமாக ஹாரன் அடித்தனர்.
பதட்டம் அடைந்த கண்ணன் காரின் எக்ஸ்லேட்டரை சற்று அதிகமாக அழுத்தவே கட்டுப்பாட்டை இழந்த கார், அருகில் இருந்த பூக்கடைமுன் பகுதியில் நுழைந்து மின் கம்பத்தின் மீது மோதி நின்றது. இதில், காரின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது. காரில் உள்ளவர்களும், பூக்கடையில் இருந்தவர்களும் காயமின்றி தப்பினர். அவிநாசி போலீசார் விசாரிக்கின்றனர்.

