/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கேராபெட் முனைப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி
/
கேராபெட் முனைப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : அக் 25, 2025 01:06 AM
திருப்பூர்: கேரளாவில் 'கேராபெட்' மற்றும் அதன் துணை நிறுவனங்கள் வாயிலாக, பல ஆண்டுகளுக்கு முன், திருப்பூர் மாவட்டம், காங்கயம் பகுதியில் இருந்து நேரடியாக தேங்காய் எண்ணெய் கொள்முதல் செய்யப்பட்டது. சில காரணங்களால் தேங்காய் எண்ணெய் கொள்முதலை 'கேராபெட்' தவிர்த்தது.
தற்போது, தமிழகத்தில், தென்னை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொப்பரை வாங்கி, தேங்காய் எண்ணெய் மற்றும் மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக, தோட்டக்கலை துறையினர் வாயிலாக, தென்னை விளையும் பகுதிகளில் உள்ள விவசாயிகளுடன் கலந்தாலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்க மாநில தலைவர் பிரபுராஜா கூறியதாவது:
தேங்காயை உலர வைத்து கொப்பரையாக்க வேண்டும்; அதற்கான உலர்கள வசதி அனைத்து விவசாயிகளிடத்திலும் இல்லை. உலர்களம் வசதியுள்ள விவசாயிகளின் தோட்டங்களில் அருகருகே உள்ள விவசாயிகள், தங்கள் கொப்பரையை உலர வைத்து, பின் 'கேராபெட்' நிறுவனத்துக்கு வழங்கும் வகையிலான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
இடைத்தரகரின்றி நேரடியாக தேங்காய் கொள்முதல் செய்யப்படுவதால், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு.
வரும், ஜனவரி மாதம் பொங்கல் வரை அடுத்தடுத்து விசேஷ நாட்கள் வருவதால் தேங்காய்க்கான தேவை அதிகரிக்கும்; சந்தை வாய்ப்பு அதிகரிக்கும்.
கேரளாவை பொறுத்தவரை, சமையலுக்கு தேங்காய் எண்ணெய் தான் பயன்படுத்துகின்றனர். குளிப்பதற்கு முன் தேங்காய் எண்ணெயை தலைக்கு தேய்த்து ஊற வைத்து குளிக்கின்றனர்.
மருத்துவ குணம் நிறைந்ததாகவும் தேங்காய் எண்ணெய் இருப்பதால், 'கேராபெட்' நிறுவனத்தினரின் நேரடி கொப்பரை கொள்முதல் திட்டத்தால், தேங்காய் எண்ணெய்க்கான முக்கியத்துவம் உணரப்பட வாய்ப்பு ஏற்படும்.
தமிழகத்தில், தென்னை விளைவிக்கப்படும் மாவட்டங்களில் உள்ள தென்னை விவசாயிகளின் சரியான எண்ணிக்கை, சாகுபடி பரப்பு, விளைச்சல் உள்ளிட்ட புள்ளிவிபரம் துல்லியமாக கணக்கெடுக்கப்பட வேண்டும்; அப்போது தான், கொப்பரை கொள்முதல் வாயிலாக விவசாயி களுக்கு கிடைக்கும் பலன்களை அறிய முடியும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
கேரளாவை பொறுத்தவரை, சமையலுக்கு தேங்காய் எண்ணெய் தான் பயன்படுத்துகின்றனர். குளிப்பதற்கு முன், மருத்துவ குணம் மிக்க, தேங்காய் எண்ணெயை தலைக்கு தேய்த்து ஊற வைத்து பின்னர் குளிப்பது கேரள மக்களின் வழக்கமாக உள்ளது.

