/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேலிப்பயிராக ஆமணக்கு பராமரிப்பு
/
வேலிப்பயிராக ஆமணக்கு பராமரிப்பு
ADDED : அக் 21, 2024 06:27 AM
உடுமலை : அனைத்து சாகுபடிகளிலும், வேலிப்பயிர் அல்லது ஊடுபயிராக ஆமணக்கு பயிரிடுவதால், முக்கிய பயிரில், நோய் தாக்குதல் வெகுவாக குறைக்கப்பட்டு, சாகுபடி செலவு குறையும் வாய்ப்புள்ளது என தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அத்துறையினர் கூறியதாவது:
எந்த பயிர் சாகுபடி செய்தாலும், ஊடுபயிர், வரப்பு பயிர், வேலிப்பயிர், பொறி பயிர் என சில தாவரங்களை கட்டாயமாக அனைத்து விவசாயிகளும், பயிர் திட்டத்தில் சேர்க்க வேண்டும். கவர்ச்சி பயிராக ஆமணக்கு, பொறியல் தட்டை சாகுபடி செய்யலாம்.
இதற்கு தனிவரிசையாக நான்கு வரிசைக்கு இடையில், ஒன்று அல்லது இரு வரிசைகள், ஆமணக்கு நட்டால், அதன் வளர்ச்சி, விரைவாக இருக்கும். ஆமணக்கு அகன்ற இலைப்பரப்பு கொண்டுள்ளதால், பயிர்களில் திடீர் தாக்குதல் செய்யும், புருட்டோனியா, பச்சைக்காய் புழு, சாறு உறிஞ்சும் பூச்சிகள், அசுவனி, வெள்ளை ஈ, தத்துப்பூச்சிகள் முதலியவற்றை ஈர்த்து அமரச்செய்யும். அதிகம் தாக்கப்பட்ட, ஆமணக்கு இலைகளை, தனியாக பிரித்து, முட்டை குவியல்களை எளிதாக அழிக்கலாம்.
இதனால், பூச்சி கொல்லி மருந்து தெளித்தல் தவிர்க்கப்படுவதுடன், நோய் தடுப்பு பணிகளும் எளிதாகும். முக்கிய பயிர் சேதமின்றி, நலமாக பாதுகாக்கப்படுகிறது. இவ்வாறு, தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்தனர்.