/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோசாலை கட்டுமான பணி கவனக்குறைவு; மேற்கூரை சரிந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி
/
கோசாலை கட்டுமான பணி கவனக்குறைவு; மேற்கூரை சரிந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி
கோசாலை கட்டுமான பணி கவனக்குறைவு; மேற்கூரை சரிந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி
கோசாலை கட்டுமான பணி கவனக்குறைவு; மேற்கூரை சரிந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி
ADDED : ஆக 20, 2025 01:19 AM

திருப்பூர்; ஹிந்து அறநிலையத்துறை சார்பில், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், கோசாலை அமைக்கும் பணியில் கவனக்குறைவுடன் செயல்பட்டதாக, பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில்களுக்கான கோசாலை, வீரராகவப்பெருமாள் கோவில் வளாகத்தில் இயங்கி வருகிறது.
இருகோவில்களிலும், அதிகாலையில், கோபூஜை நடத்தப்படுவதாலும், மூன்றுகால பூஜைகளுக்காகவும், கறவை மாடுகள் கோசாலையில் வளர்க்கப்படுகின்றன. கோசாலையை மேம்படுத்தும் வகையில், 19 லட்சம் ரூபாய் மதிப்பில், 30 அடி அகலம், 60 அடிநீளம் என்ற அளவில், புதிய கோசாலை அமைக்க திட்டமிடப்பட்டது.
அஸ்திவாரம் தோண்டி, கான்கிரீட் துாண்கள் அமைத்து, மேற்கூரையில், இரட்டை ஓடு வேயும் வகையில் கேரள மாடல்மேற்கூரை அமைக்கப்பட்டு வருகிறது.
இரும்பு கம்பிகள் பொருத்திய பின், இரட்டை அடுக்காக, மண் ஓடு வேயும் பணியும் துவங்கியது; தெற்கு பகுதியில் ஓடு வேய்ந்த பிறகு, திடீரென பணிகள் நிறுத்தப்பட்டது; ஓடுகள் மீண்டும் கீழே இறக்கி வைக்கப்பட்டுள்ளன.
பக்தர்கள் கூறுகையில், 'மொத்தம், 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் துவங்கியது; அதிகாரிகள் மேற்பார்வையில்லாமல் நடந்த பணிகளால், தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஓடு வேய்ந்த பிறகு, கூடுதல் எடை தாங்காததால், வேய்ந்த ஓடுகள் சரிந்து விழுந்து விட்டன.
இரும்பு கம்பங்களும் சேதமாகியது; அவசரகதியில், ஓடுகளை இறக்கிவிட்டு, மீண்டும் சீரமைப்பு பணிகளை செய்து வருகின்றனர். எடைஅதிகம் உள்ள இரும்பு கம்பிகள் பொருத்தியிருக்க வேண்டும்.
நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தும் வகையில், கோசாலை பணிகள் ஸ்திரமாக நடப்பதை, அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் அஜாக்கிரதையாக இருந்துவிடக்கூடாது,' என்றனர்.
செயல் அலுவலர் வனராஜாவிடம் கேட்டதற்கு, ''பணிகளை, அறநிலையத்துறை பொறியாளர்கள் ஆய்வு செய்து, அனுமதியளித்த 'டிசைனில்' கோசாலை மேற்கூரை அமையவில்லை என்று கண்டித்துள்ளனர். இதன்காரணமாக, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மறுசீமைப்பு பணிகளை செய்து வருகிறார். அனுமதித்த 'டிசைனில்' மேற்கூரை அமையவில்லை என்பதால், மாற்றியமைக்கப்பட உள்ளது,'' என்றார்.
சேவை கட்டணம்
150 சதவீதம் அதிகரிப்பு
கோவில்களில், தலா 2 ரூபாய்க்கு அர்ச்சனை டிக்கெட் மட்டும் விற்கப்படும். தீப விளக்கு விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவில் வருவாயை பெருக்கும் நோக்கில், அர்ச்சனை டிக்கெட் கட்டணம், 5 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது; அதாவது, 150 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக, விஸ்வேஸ்வர சுவாமி, வீரராகவப்பெருமாள் கோவில் பக்தர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.