நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் :   திருப்பூர், மண்ணரை தெற்கு தோட்டத்தைச் சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன், 30. கார் கன்சல்டிங் நிறுவனம் வைத்துள்ளார்.
தனது வீட்டுக்கு அருகேயுள்ள காலி இடத்தில் விற்பனைக்கு வந்த கார்களை நிறுத்தி வைத்திருப்பது வழக்கம். நேற்று முன்தினம் இரவு அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களில் திடீரென தீப்பிடித்து எரியத் துவங்கியது. தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீயில் ஏறத்தாழ, 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 3 கார்கள் முழுமையாக எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

