/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விதிமீறி பட்டாசு வெடித்த 20 பேர் மீது வழக்கு ப்பதிவு
/
விதிமீறி பட்டாசு வெடித்த 20 பேர் மீது வழக்கு ப்பதிவு
விதிமீறி பட்டாசு வெடித்த 20 பேர் மீது வழக்கு ப்பதிவு
விதிமீறி பட்டாசு வெடித்த 20 பேர் மீது வழக்கு ப்பதிவு
ADDED : அக் 21, 2025 11:04 PM
திருப்பூர்: தீபாவளி பண்டிகையின் போது, அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பட்டாசு வெடித்ததாக 20 பேர் மீது திருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க நேரம் குறிப்பிட்டு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதன்படி காலை 6:00 முதல் 7:00 மணி மற்றும் மாலை 7:00 முதல் இரவு 8:00 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும்.
இதனை மீறி அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பட்டாசு வெடிப்பது குறித்து அனைத்து பகுதியிலும் போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்தனர். அவ்வகையில் திருப்பூர் வடக்கு, தெற்கு, அனுப்பர்பாளையம், சென்ட்ரல், பூண்டி, வீரபாண்டி உள்ளிட்ட போலீஸ் எல்லை பகுதிகளில், 20 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.