/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீர வணக்க நாள் போலீசார் அனுஷ்டிப்பு
/
வீர வணக்க நாள் போலீசார் அனுஷ்டிப்பு
ADDED : அக் 21, 2025 11:04 PM

திருப்பூர்: பணியின் போது உயிரிழந்த போலீசாருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
கடந்த 1959 அக்., 21ல், லடாக் பகுதியில் சீன ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படையினர், 10 பேர் உயிரிழந்தனர். அவ்வகையில் ஆண்டு தோறும் அக்., 21ம் தேதி நாடு முழுவதும் இது போல் பணியின் போது உயிரிழந்த போலீசாருக்கு மரியாதை செலுத்தும் வகையில் வீர வணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
அவ்வகையில், திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் நேற்று வீர வணக்க நாள் நிகழ்ச்சி நடந்தது. போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், உயிர் நீத்த போலீசார் சார்பில் நிறுவப்பட்டுள்ள நினைவு துாணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இதில், துணை கமிஷனர்கள், திருப்பூர்எஸ்.பி., உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உட்பட போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.