/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கணக்கில் வராத பணம் பறிமுதல் சார்-பதிவாளர் மீது வழக்குபதிவு
/
கணக்கில் வராத பணம் பறிமுதல் சார்-பதிவாளர் மீது வழக்குபதிவு
கணக்கில் வராத பணம் பறிமுதல் சார்-பதிவாளர் மீது வழக்குபதிவு
கணக்கில் வராத பணம் பறிமுதல் சார்-பதிவாளர் மீது வழக்குபதிவு
ADDED : மே 16, 2025 12:23 AM
தாராபுரம், ; தாராபுரத்தில் உள்ள பத்திரப்பதிவு சார் - பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு, வில்லங்க சான்று அளித்தல், பத்திர நகல் அளித்தல் போன்ற காரணங்களுக்காக புரோக்கர்கள் வாயிலாக பொதுமக்களிடம் இருந்து லஞ்சம் பெறப்படுவதாக புகார்கள் எழுந்தது.
இதனால், கடந்த, 30ம் தேதி திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்-பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அதில், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் கழிப்பறையில் இருந்து, கவரில் இருந்த, 3 லட்சம் ரூபாய், அலுவலகத்தில் இருந்த, இரு நபர்களிடம் இருந்து, 1.53 லட்சம் ரூபாய் என, மொத்தம், 4.53 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது.
இதற்கிடையில், கைப்பற்றப்பட்ட பணம் லஞ்சமாக கொடுக்க கொண்டு வந்திருக்கலாம் என்ற அடிப்படையில், இதுதொடர்பாக போலீசார் விளக்கம் கேட்டுள்ள நிலையில், பணம் பறிமுதல் செய்தது தொடர்பாக சார்-பதிவாளர் உமா மகேஸ்வரி, 50, பத்திரம் பதிவு செய்ய வந்த அலங்கியத்தை சேர்ந்த முத்துசாமி, 50 மற்றும் நடராஜன், 44 என, மூன்று பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுதவிர, கடந்த ஜன., முதல் ஏப்., 30 வரை நடந்துள்ள பத்திரப்பதிவு விபரம், அன்றைய தினம் நடந்த பத்திரப்பதிவு, வருகை பதிவேடு உள்ளிட்ட பல்வேறு விதமான ஆவணங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
இதில், ஏதாவது தவறான தகவல் தெரிய வரும் போது, மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.