/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிணற்றில் விழுந்த பூனை - கோழி மீட்பு
/
கிணற்றில் விழுந்த பூனை - கோழி மீட்பு
ADDED : மே 03, 2025 04:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கயம்; காங்கயம் அருகே கிணற்றில் விழுந்து தவித்த பூனை மற்றும் கோழியை, தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
காங்கயம், காடையூர் வீரணம்பாளையத்தை சேர்ந்தவர் மணிமொழி, 50. இவர் பூனை ஒன்றை வளர்த்து வந்தார். அந்த செல்லபிராணி, அதே பகுதியில் தண்ணீர் இல்லாத, 70 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது. தகவலின் பேரில், காங்கயம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பார்த்தனர்.
பின், கயிறு கட்டி கிணற்றில் இறங்கினர். அப்போது பூனை குட்டியுடன், கோழி ஒன்றும் இருப்பது தெரிந்தது. இரண்டையும் பத்திரமாக மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர். செல்லபிராணிகளை மீட்ட தீயணைப்பு வீரர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.