ADDED : ஏப் 29, 2025 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கயம்:
காங்கயம் அடுத்த ஓலப்பாளையம், கண்ண புரத்தில் உள்ள விக்ரம சோழீஸ்வர சுவாமி கோவில் தேர்த்திருவிழாவையொட்டி பழமை வாய்ந்த கண்ணபுரம் மாட்டுச்சந்தை நேற்று முன்தினம் துவங்கியது. அடுத்த மாதம் திருவிழா நிறைவு பெறும் வரை நடைபெற உள்ளது.
மாட்டுச்சந்தை நடக்கும் இடம், சந்தைக்கு விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வரும் கால்நடைகள் மற்றும் தற்காலிக கடைகளுக்கு சுங்கம் வசூல் செய்ய ஊராட்சி ஒன்றிய கமிஷனர் ராகவேந்திரா முன்னிலையில் நேற்று ஏலம் நடந்தது. கால்நடைகளுக்கு சுங்கம் வசூலிக்கும் ஏலம் 1.09 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. வரும், 13ம் தேதி வரை சுங்கம் வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

