/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திங்களுக்கு பதிலாக ஞாயிறு நடக்கிறது மாட்டுச்சந்தை
/
திங்களுக்கு பதிலாக ஞாயிறு நடக்கிறது மாட்டுச்சந்தை
ADDED : ஜன 12, 2024 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;திங்கள் தோறும் அமராவதிபாளையத்தில் நடக்கும் மாட்டுச்சந்தை, நடப்பு வாரம், ஞாயிற்றுக்கிழமை (14ம் தேதி) நடக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வாரம் திங்கள்கிழமை, திருப்பூர், கோவில்வழியை அடுத்துள்ள அமராவதிபாளையத்தில் மாட்டுச்சந்தை நடைபெறும். வரும், 15ம் தேதி(திங்கிள்கிழமை) பொங்கல், 16ம் தேதி மாட்டுப்பொங்கல் என்பதால், 15ல் மாட்டுச்சந்தை நடக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக, நடப்பு வாரம் மட்டும், ஞாயிற்றுக்கிழமை (14ம் தேதி) மாட்டுச்சந்தை அமராவதிபாளையத்தில் நடக்குமென, சந்தை ஏற்பட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.