/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சி.பி.எஸ்.இ., தேர்வு துவங்கியது
/
சி.பி.எஸ்.இ., தேர்வு துவங்கியது
ADDED : பிப் 16, 2024 11:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை;திருப்பூர் மாவட்டத்தில், சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு துவங்கியது. வரும், ஏப்., 2ம் தேதி வரை தேர்வு நடக்கிறது.
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.,) கீழ் இயங்கும் பள்ளிகளுக்கான பொதுத்தேர்வு நேற்றுமுன்தினம் துவங்கியது. திருப்பூர் மாவட்டத்தில், 15 முதல், 25 மையங்களில் காலை, 10:00 மணிக்கு தேர்வு துவங்கியது.
ஏப்., 2ம் தேதி வரை தேர்வுகள் நடக்கிறது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 படிக்கும், 4,300 பேர் இத்தேர்வை எழுதுகின்றனர். மாநில பாடத்திட்டத்தின் கீழ் பத்து மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு மாணவ, மாணவியர் ஆயத்தமாகி வருகின்றனர்.