/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிக்னலில் 'சிசிடிவி' கேமரா: குற்றம் குறைக்க முனைப்பு
/
சிக்னலில் 'சிசிடிவி' கேமரா: குற்றம் குறைக்க முனைப்பு
சிக்னலில் 'சிசிடிவி' கேமரா: குற்றம் குறைக்க முனைப்பு
சிக்னலில் 'சிசிடிவி' கேமரா: குற்றம் குறைக்க முனைப்பு
ADDED : அக் 06, 2025 12:30 AM

திருப்பூர்: திருப்பூரில் குற்றங்களை தடுக்க காந்திநகர் சிக்னலில் அதிநவீன 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெரிசல் தீர்வு, சீரான போக்குவரத்துக்காக பல நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். அவ்வகையில், பிரதான ரோடுகளில் 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டு வருகிறது.
இதுதவிர குற்றத்தடுப்பு நடவடிக்கையாகவும் முக்கிய சந்திப்பு ரோடுகளில் கேமரா பொருத்த ஆலோசனை செய்து வருகின்றனர். நான்கு ரோடு போன்ற சந்திப்பு பகுதிகளில் அதிநவீன வசதிகளை கொண்ட கேமராக்களை பொருத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, அனுப்பர்பாளையம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட, அவிநாசி ரோடு, காந்தி நகர் நான்கு ரோடு சந்திக்கும் பகுதியில் மையத்தில் போலீஸ் நிழற்குடையில், நான்கு ரோடுகளை பார்வையிடும் வகையில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
வாகன எண், வாகன ஓட்டியின் முகம் தெளிவாக பதிவாகும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. இதேபோல், மற்ற பகுதியில் பொருத்தவும் ஒவ்வொரு பகுதியாகவும் ஆய்வு செய்து வருகின்றனர்.
போலீசார் கூறுகையில், 'போக்குவரத்து, குற்றதடுப்பு நடவடிக்கையாக முக்கிய சந்திப்புகளில் கேமரா பொருத்தப்பட்டு வருகிறது. வழிப்பறி, திருட்டு போன்றவற்றில் ஈடுபட்டு தப்பிக்கும் நபர்கள் சிக்கும் வகையில் முக்கிய சந்திப்பில், நான்கு ரோடுகளில் கேமரா பொருத்தப்படுகிறது.
இதுபோல் பல இடங்களில் கேமரா பொருத்த ஆய்வு செய்யப்பட்டு வருகிறது,' என்றனர்.