/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மிக பதற்றமான ஓட்டுச்சாவடியில் 'சிசிடிவி' கேமரா கண்காணிப்பு
/
மிக பதற்றமான ஓட்டுச்சாவடியில் 'சிசிடிவி' கேமரா கண்காணிப்பு
மிக பதற்றமான ஓட்டுச்சாவடியில் 'சிசிடிவி' கேமரா கண்காணிப்பு
மிக பதற்றமான ஓட்டுச்சாவடியில் 'சிசிடிவி' கேமரா கண்காணிப்பு
ADDED : மார் 16, 2024 11:52 PM
திருப்பூர்:'தேர்தல் பருவம்... தேசத்தின் பெருமிதம்' என்ற கோஷத்துடன், நாட்டின், 18வது லோக்சபா தேர்தல் துவங்கியுள்ளது. தேர்தல் முன்னேற்பாடுகளின் ஒரு பகுதியாக, பதற்றமான ஓட்டுச்சாவடிகள் பாதுகாப்பை உறுதி செய்ய, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில், சட்டசபை தொகுதி வாரியாக, பதற்றமான, மிகபதற்றமான ஓட்டுச்சாவடிகள் பாதுகாப்பு தொடர்பான ஏற்பாடுகளை துவக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த தேர்தல்களில், அசம்பாவிதம் நடந்த சாவடிகள், பதற்றமான சாவடிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. பதற்றமான சாவடிகளில், கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும். மிக பதற்றமான சாவடிகளில், முழு ஓட்டுப்பதிவையும் கண்காணிக்கும் வசதி ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கூறுகையில், 'மிகபதற்றமான சாவடிகளில், 'சிசிடிவி' கேமரா பொருத்தி, தேர்தலுக்கு முந்தைய நாளில் இருந்தே கண்காணிக்கப்படும். ஓட்டுப்பதிவு நடவடிக்கை முழுவதும், கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படும்,' என்றனர்.

