/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை கொட்டுவதை தடுக்க 'சிசிடிவி' கரைப்புதுார் ஊராட்சியில் கண்காணிப்பு
/
குப்பை கொட்டுவதை தடுக்க 'சிசிடிவி' கரைப்புதுார் ஊராட்சியில் கண்காணிப்பு
குப்பை கொட்டுவதை தடுக்க 'சிசிடிவி' கரைப்புதுார் ஊராட்சியில் கண்காணிப்பு
குப்பை கொட்டுவதை தடுக்க 'சிசிடிவி' கரைப்புதுார் ஊராட்சியில் கண்காணிப்பு
ADDED : நவ 14, 2025 12:12 AM

பல்லடம்: குற்றச் சம்பவங்களை தடுப்பதற்கு மட்டுமின்றி, தற்போது, குப்பைகள் கொட்டப்படுவதை கண்காணிக்கவும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டிய அவலம் ஏற்பட்டு வருகிறது.
சமீப காலமாக, குப்பை பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இது ஏதோ திருப்பூர் மாநகராட்சிக்கு வந்த பிரச்னை என்று மட்டுமே கருத முடியாது. காரணம், நகரப் பகுதிகளுக்கு இணையாக இன்று கிராமங்களிலும் குப்பைகள், கழிவுகள் மலைபோல் குவிகின்றன. மக்கள் தொகை பெருக்கத்துக்கு இணையாக, தேவைகளும் அதிகரித்துள்ளதால்,
குக்கிராமங்களிலும் குப்பைகள் குவிந்து வருகின்றன. பொது இடங்களிலும், நீர்நிலைகள், பாசன வாய்க்கால் உள்ளிட்டவையும் குப்பைகளால் சூழ்ந்து வருகின்றன. பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க உள்ளாட்சி நிர்வாகங்கள் என்னதான் நடவடிக்கை எடுத்தாலும், அவை வீண் போகின்றன.
எனவே, குப்பை கொட்டுவதை தடுக்கும் முயற்சியாக, தடுப்புகள் அமைத்தும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தியும், கண்காணிக்க வேண்டிய அவலம் ஏற்பட்டு வருகிறது.
வழக்கமாக, குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக மட்டுமே போலீசார் பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துகின்றனர்.
ஆனால், இன்று, பொது இடங்களில் குப்பை கொட்டுவதை கண்காணிக்கவும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு, பல்லடம் அருகே, கரைப்புதுார் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், தடுப்பு அமைக்கப்பட்டு, 'இங்கு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதால்; யாரும் குப்பைகளை கொட்ட வேண்டாம், என அறிவிப்பும் வைக்கப்பட்டுள்ளது.
மாற்று சிந்தனை தேவை சிசிடிவி கேமரா அமைத்து விட்டால் குப்பை கொட்டுவதை தடுத்து விடலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர். ஆனால், அந்த இடம் இல்லை எனில், வேறொரு இடத்தில் நிச்சயமாக அந்தக் குப்பைகள் குவியப் போகின்றன. எனவே, குப்பைகள் கொட்டப்படுவதை கண்காணிக்கும் நடவடிக்கையை தவிர்த்து, அதை எவ்வாறு கையாளலாம் என்ற மாற்று சிந்தனைக்கு அதிகாரிகள் வரவேண்டும்.

