/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொதுமக்களுடன் இணைந்து புத்தாண்டு கொண்டாட்டம்
/
பொதுமக்களுடன் இணைந்து புத்தாண்டு கொண்டாட்டம்
ADDED : ஜன 02, 2026 05:43 AM

அவிநாசி: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிமுறைகளை விளக்கி, அவிநாசி போலீசார் கேக் மற்றும் இனிப்புகள் வழங்கி புத்தாண்டை கொண்டாடினர்.
அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்டில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, டி.எஸ்.பி. சிவக்குமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் ராஜபிரபு, எஸ்.ஐ.கள் வேலுசாமி,கோவிந்தம்மாள் மற்றும் போலீசார், பொதுமக்களுடன் இணைந்து கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி புத்தாண்டு தினத்தை வரவேற்று கொண்டாடினர்.
அதனை தொடர்ந்து கார், டூவீலரில் வந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கி ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவதன் அவசியம் மற்றும் மது அருந்தி வாகனம் ஓட்டக்கூடாது எனவும், போக்குவரத்து விதிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டுமெனவும் போலீசார் அறிவுறுத்தினர்.

