/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துாய்மை பணிக்காக 50 பேட்டரி வாகனம்
/
துாய்மை பணிக்காக 50 பேட்டரி வாகனம்
ADDED : ஜன 02, 2026 05:43 AM
திருப்பூர்: மாநகராட்சியில் துாய்மைப் பணிக்கு புதிய வாகனங்கள் பயன்பாடு துவக்கிவைக்கப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகளில் குப்பை சேகரிக்க, பேட்டரி வாகனங்கள், தள்ளு வண்டிகள் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு வார்டு களிலும், இது போன்ற பேட்டரி வாகனங்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இது குறித்து தொடர்ந்து கவுன்சிலர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இதனால், இப்பணிக்கு, 50 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. அவற்றின் செயல்பாடுகள் நேற்று துவக்கி வைக்கப்பட்டது. மாநகராட்சி மைய வளாகத்தில் மேயர் தினேஷ்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாநகராட்சியின், 2ம் மண்டல குழு தலைவர் கோவிந்தராஜ், சுகாதார குழு தலைவர் கவிதா முன்னிலை வகித்தனர்.
புதிய வாகனங்கள் பயன்பாட்டுக்கு வரும் நிலையில், குப்பை சேகரிப்பு பணிகள் வேகமெடுக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

