/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ேஷக் சின்ன மவுலானா நுாற்றாண்டு விழா; ராக 'மழை'யில் திளைத்த இசை ஆர்வலர்கள்

ADDED : ஏப் 07, 2025 05:56 AM

திருப்பூர்; திருப்பூர் ஷண்முகானந்த சங்கீத சபா, ேஷக் சின்ன மவுலானா நினைவு அறக்கட்டளை ஆகியன சார்பில், நுாற்றாண்டு விழா நடந்தது.
ஹார்வி குமாரசாமி மண்டபத்தில், நேற்று முன்தினம் நிகழ்ச்சி துவங்கியது; சின்ன மவுலானா ஆவண படம் வெளியிடப்பட்டது. சிறப்பு விருந்தினராக சுந்தரம் பங்கேற்றார்; அறக்கட்டளை நிர்வாகிகள் பேசினர். மாலையில், கல்யாணபுரம் தயாபரன் மற்றும் வேதகிரி குழுவின் நாதஸ்வரம், விஜய்குமார், ராஜன் குழுவின் தவில் இசை நிகழ்ச்சி நடந்தது.
இரண்டாவது நாளான நேற்று, குன்னக்குடி பாலமுரளி கிருஷ்ணாவின் பாட்டு நிகழ்ச்சி நடந்தது. கணேஷ் பிரசாத்தின் வயலின், மோகன்ராமின் மிருதங்க இன்னிசையுடன், வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது.
'மேருஸமான...' என்ற, மாயாமாளவகவுளை ராகத்தில் அமைந்த, தியாகராஜர் பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது. 'பாலிம்ப...' என்ற ஆரபி ராகத்தில் அமைந்த சேைஷய்யர் இயற்றிய பாடல், தியாகராஜரின் பஞ்சரத்தின கீர்த்தனைகளில் ஒன்றான, 'கவுளை' ராகத்தில் அமைந்த, 'கனகனருசிரா...' என்ற பாடல் என, பிரசித்தி பெற்ற பாடல்கள், இன்னிசையுடன் பாடப்பட்டது.