/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சென்சுரி மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா கோலாகலம்
/
சென்சுரி மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா கோலாகலம்
ADDED : ஆக 20, 2025 01:09 AM

திருப்பூர்; திருப்பூரில், சென்சுரி பள்ளியில் ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சென்சுரி பவுண்டேசன் மெட்ரிக் பள்ளியின் ஆண்டு விழா கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது. முன்னாள் ராணுவ வீரர்கள் ரிச்சர்ட் பிளேஸ் மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
பள்ளியின் பிளஸ் 1 மாணவன் சஞ்சித் லோ வரவேற்றார். பள்ளி தாளாளர் சக்திதேவி சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார். பத்து மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை புரிந்த மாணவர்களுக்கும் மற்றும் நுாறு சதவீத வருகைப்பதிவு உள்ள மாணவர்களுக்கும், அவர்களின் சாதனைக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
தொடர்ந்து மாணவ, மாணவியரின் வண்ணமிகு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. 'என் இந்தியா என் பெருமை' என்ற கருத்தை மையமாக கொண்டு விழா கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவ தலைவர் முஹமது யுஹானிஸ்ஷெரிப் ஜா நன்றி கூறினார்.