/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாதனை சிறுமியருக்கு பாராட்டுப்பத்திரம்
/
சாதனை சிறுமியருக்கு பாராட்டுப்பத்திரம்
ADDED : ஆக 21, 2025 09:41 PM
திருப்பூர்; கலெக்டர் மனிஷ் நாரணவரே அறிக்கை: ஜன., 26, தேசிய பெண் குழந்தைகள் தின விழாவின்போது, தமிழக அரசால், 2025-26ம் ஆண்டுக்கான, பெண் குழந்தைகள் முன்னேற்றத்துக்காக சிறப்பாக செயல்பட்ட பெண் குழந்தைகளுக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட உள்ளது.
பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு, குழந்தை திருமணம் தடுத்தல், சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகளுக்கு தீர்வு காணும் ஓவியம், கவிதை மற்றும் கட்டுரைகள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல். ஆண்களால் மட்டுமே முடியும் என்கிற செயல்களை, பெண்களாலும் முடியும் என சாதித்து காட்டியோர் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு, 13 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட, தமிழகத்தை சேர்ந்த பெண் குழந்தைகள், பெயர், முகவரி, போட்டோ, ஆதார் எண், சாதனைகளுக்கான சான்று ஆகியவற்றுடன், விபரங்களை ஒரு பக்கத்துக்கு மிகாமல், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், செப். 30ம் தேதிக்குள், கலெக்டர் அலுவலக வளாகத்திலள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். தேர்வு செய்யப்படும் பெண் குழந்தைகளுக்கு, பாராட்டுப்பத்திரம் மற்றும் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.