ADDED : டிச 23, 2024 11:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம் ;அவிநாசி அடுத்த பெரிய கருணைபாளையத்தை சேர்ந்தவர் ராம்பிரியா, 20; தனியார் நிறுவன ஊழியர்.
நேற்று முன்தினம் மொபட்டில் திருப்பூரில் இருந்து, அவிநாசி சென்று கொண்டிருந்தார். திருமுருகன்பூண்டி, நல்லாத்து பாளையம் அருகே சென்றபோது, பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர் அவர் அணிந்திருந்த இரண்டு பவுன் தங்க செயினை பறித்து சென்றார். திருமுருகன்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.