/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கழிவுக்கிடங்காக சங்கிலிப்பள்ளம் ஓடை
/
கழிவுக்கிடங்காக சங்கிலிப்பள்ளம் ஓடை
ADDED : டிச 25, 2024 11:18 PM

திருப்பூர்,; சங்கிலிப்பள்ளம் ஓடையில் கழிவுகளை கொட்டு வதால், மழைக் காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படுவதாக, பட்டுக்கோட்டையார் நகர் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருப்பூர் நகரப்பகுதியில் செல்லும் சங்கிலிப்பள்ளம், நொய்யலில் கலக்கிறது. குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சங்கிலிப்பள்ளம் வழியாக, நொய்யலுக்கு செல்கிறது. அத்துடன், தொழிற்சாலைகள், குடியிருப்புகளில் இருந்து கழிவு களையும் பள்ளத்தில் கொட்டுகின்றனர். மாநக ராட்சி சார்பில், பள்ளத்துக்குள் கொட்டும் குப்பை அகற்றப்படுவதில்லை.
ஒவ்வொரு ஆண்டும், மழை காலத்துக்கு முன்பாக துார்வாரி சுத்தம் செய்யும் போது, அப்படியே இருகரைகளிலும் ஒதுக்கிவிடுகின்றனர். இதனால், குப்பை நாளுக்கு நாள் அதிகரித்து, மழைகாலங்களில் தண்ணீர் செல்வது தடைபடுகிறது.
குறிப்பாக, பட்டுக்கோட்டையார் நகர் அருகே, சங்கிலிப்பள்ளத்தில் குப்பை கொட்டுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொழிற்சாலை கழிவுகள், அப்பகுதிக்கு கொண்டு வந்து பள்ளத்தில் கொட்டப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,'சங்கிலிப்பள்ளத்தில் குப்பையை கொட்டுவதால், நாளுக்கு நாள் மேடாக மாறிவிடுகிறது. பாலத்தின் மீதும் அதிக அளவு குப்பை கொட்டி செல்கின்றனர்.
மழைக் காலங்களில், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மழைநீர் செல்வது தடைபட்டு, வெள்ள பாதிப்பும் ஏற்படுகிறது. கால்வாய் மற்றும் நீரோடைகளில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்,' என்றனர்.

