/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உள்ளாட்சி அலுவலர் பணி உயர்வு தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்
/
உள்ளாட்சி அலுவலர் பணி உயர்வு தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்
உள்ளாட்சி அலுவலர் பணி உயர்வு தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்
உள்ளாட்சி அலுவலர் பணி உயர்வு தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்
ADDED : ஏப் 18, 2025 11:35 PM
திருப்பூர்: நகராட்சி கமிஷனர் உள்ளிட்ட துறை அலுவலர்கள், பணி உயர்வுக்கான துறை தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த அரசாணையை குறிப்பிட்டு, நகராட்சி நிர்வாக துறை இயக்குனர், நகராட்சி மற்றும் மாநகராட்சி கமிஷனர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
உள்ளாட்சி அமைப்பு விதிகளின் படி துறையில் பணியாற்றும் அலுவலர்கள் பதவி உயர்வு பெற துறை ரீதியான தேர்வுகள் நடத்தப்படும். இதில் நகராட்சி கமிஷனர் பணியிடத்தில் 'கிரேடு' வாரியாக பதவி உயர்வு வழங்கப்படும். இதற்கு துறை ரீதியாக நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதற்கான பாடத்திட்டம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசிதழில் கடந்த 3ம் தேதி வெளியிடப்பட்டது.
அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கும் இந்த பாடத்திட்டம் மாற்றம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு, அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி கமிஷனர்கள், நகராட்சிகளின் மண்டல இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்:
துறை ரீதியாக தற்போதுள்ள இரு பாடங்கள் தேர்வுகள் நான்கு பாடங்களாக உயர்த்தப்படுகிறது. நேரடியாக நகராட்சி கமிஷனராக நியமனம் பெறுவோர், இந்த நான்கு பாடங்கள் மட்டுமின்றி, மேலும் ஒரு பாடமாக, அரசு அலுவலர் கையேடு பாடத்திலும் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். கிரேடு 2 கமிஷனர் பதவி உயர்வு பெறவும் இந்த தேர்ச்சி அவசியம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உதவி கமிஷனர், முதுநிலை வருவாய் அலுவலர், முதுநிலை கணக்கு அலுவலர், நகர் நல அலுவலர்; நேர்முக உதவியாளர், உதவியாளர், தட்டச்சர், இளநிலை உதவியாளர், சட்ட அலுவலர், மன்ற செயலாளர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் உள்ளிட்ட 41 பணியிடங்களுக்கு துறை தேர்வுகளில், நகராட்சி நிர்வாக விதிகள், கணக்கு தேர்வு ஆகிய பாடத்திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.