/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உப்பாறு ஓடையின் குறுக்கே தடுப்பணை; ரூ. 7.57 கோடி மதிப்பில் பணி தீவிரம்
/
உப்பாறு ஓடையின் குறுக்கே தடுப்பணை; ரூ. 7.57 கோடி மதிப்பில் பணி தீவிரம்
உப்பாறு ஓடையின் குறுக்கே தடுப்பணை; ரூ. 7.57 கோடி மதிப்பில் பணி தீவிரம்
உப்பாறு ஓடையின் குறுக்கே தடுப்பணை; ரூ. 7.57 கோடி மதிப்பில் பணி தீவிரம்
ADDED : ஜூன் 06, 2025 10:52 PM

உடுமலை, ; உப்பாறு ஓடையின் குறுக்கே, நவனாரி கிராமத்தில் 7.57 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
நீர்வளத்துறை, திருமூர்த்தி கோட்டம் சார்பில், உடுமலை அருகே, உப்பாறு ஓடையின் குறுக்கே நவனாரி கிராமத்தில் நபார்டு வங்கி நிதி உதவியில், ரூ. 7.57 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது.
இந்த தடுப்பணை பணி நிறைவு பெற்றால், மழை காலங்களில் வீணாகும் நீர் சேமிக்கப்படுவதோடு, அருகிலுள்ள நவனாரி, பெரிய குமாரபாளையம், முண்டுவேலம்பட்டி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயரும்.
சுற்றியிலுள்ள, 120 திறந்த வெளி கிணறுகள் மற்றும் ஏராளமான போர்வெல்களுக்கு நிலத்தடி நீர் மட்டம் செறிவூட்டப்படுவதோடு, குடிநீர் தேவையும் நிறைவு செய்ய வாய்ப்புள்ளது.
உப்பாறு ஓடையின் குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணியை, நீர்வளத்துறை தரக்கட்டுப்பாட்டு பிரிவு தலைமைப்பொறியாளர் சுந்தரராஜன், செயற்பொறியாளர் ஜானகி, உதவி செயற்பொறியாளர் ஞானவேல், உதவி பொறியாளர் சந்திரசேகரன் ஆகியோரை கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
கட்டுமான பொருட்களின் தரம் ஆய்வு செய்ததோடு, பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தினர்.
ஆய்வின் போது, நீர் வளத்துறை, திருமூர்த்தி கோட்ட செயற்பொறியாளர் பிரபாகரன், உடுமலை கால்வாய் உப கோட்ட உதவி செயற்பொறியாளர் பாபு சபரீஸ்வரன் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.