நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரத்தில் அரசு மருத்துவமனை அருகே, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், இயங்கும் மாணவியர் விடுதி உள்ளது. இங்கு 80 பேர் தங்கி, அரசு பள்ளிகளில் பயின்று வருகின்றனர். நேற்று ஆதி திராவிடர் நல கண்காணிப்பு குழு உறுப்பினர் சிவசங்கர் ஆய்வு செய்தார். விடுதி சுற்றுப்புறத்தில், குப்பை கழிவுகள் அதிகளவில் தேங்கி கிடக்கிறது.
விடுதி முன்புறம் ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதைத் தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க அவர் அறிவுறுத்தினார்.

