sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அரசியலுக்கு 'நோ என்ட்ரி' போட்ட சேரன் தொழிலாளர் காலனி...

/

அரசியலுக்கு 'நோ என்ட்ரி' போட்ட சேரன் தொழிலாளர் காலனி...

அரசியலுக்கு 'நோ என்ட்ரி' போட்ட சேரன் தொழிலாளர் காலனி...

அரசியலுக்கு 'நோ என்ட்ரி' போட்ட சேரன் தொழிலாளர் காலனி...


ADDED : மார் 31, 2025 11:46 PM

Google News

ADDED : மார் 31, 2025 11:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், தாராபுரம் ரோடு, செட்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ளது சேரன் தொழிலாளர் காலனி குடியிருப்பு பகுதி. தாராபுரம் ரோட்டில் விவேகானந்தா பள்ளிக்கு எதிரேயுள்ள ரோட்டில் இரண்டு குடியிருப்பு பகுதிகளைக் கடந்து சென்றால், இதன் வரவேற்பு நுழைவாயில் நம்மை வரவேற்கிறது.

இப்பகுதியிலிருந்து செவந்தாம்பாளையம் சென்று சேரும் வகையிலும், செட்டிபாளையம் செல்லும் வகையிலும் இரு வழித்தடங்களும் அமைந்துள்ளன. இப்பகுதியில் வசிப்போர் தங்களுக்குள் நலச்சங்கம் ஒன்றை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றனர். இதன் தற்போதைய தலைவராக வெங்கடாசலம், செயலாளராக அன்பழகன் மற்றும் பொருளாளராக ராஜேந்திரன் உள்ளனர்.

தங்கள் குடியிருப்பு பகுதி மற்றும் நலச்சங்கம் குறித்து அவர்கள் நம்முடன் பகிர்ந்து கொண்டது:

எங்கள் காலனியில், 450க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கோவிலுக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் குபேர விநாயகர் கோவில் மற்றும் மண்டபமும், சங்க அலுவலகமும் செயல்படுத்தி வருகிறோம். பொங்கல் விழா சுற்றுப்பகுதியிலிருந்தும் மக்கள் வந்து கூடி சிறப்பான முறையில் இரண்டு நாள் விழாவாக நடத்தப்படும். அதே போல் சித்திரை பிறப்பும் சிறப்பு நிகழ்ச்சிகளாக நடைபெறும்.

மாநகராட்சியின் 59 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் காலனி அமைந்துள்ளது. கோவில் அருகேயுள்ள ஆழ்குழாய் கிணறு மற்றும் மேல்நிலைத் தொட்டி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. தற்போது 4வது குடிநீர் திட்டம் எங்கள் பகுதியில் குடிநீர் பிரச்னையே இல்லாத வகையில் தீர்வாக அமைந்துள்ளது.

குழாய் பதிப்பில் பிரச்னை


பிரச்னையே இந்த குழாய் பதிப்பு பணியில் தான். பிரதான ரோட்டில் குழாய் பதிப்புக்கு குழி தோண்டப்பட்டது. குறுகிய காலத்தில் 42 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ரோடு சேதமானது. தொடர்ந்து நான்கு முறைக்கு மேல், இக்குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தொடர்ந்து இந்த ரோடு சேதமடைந்தது. இன்றும் கூட குழாய் உடைந்து குடிநீர் ரோட்டில் வீணாகிறது. இங்குள்ள, 13 வீதிகளில், 10 வீதிகள் வரை தார் ரோடு வசதி உள்ளது. மீதமுள்ள 3 வீதிகள் ரோடு போடாமல் அங்குள்ள வீட்டு உரிமையாளர்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

பசுமையான சூழல்


ஸ்ரீசத்ய சாய் அறக்கட்டளை உடன் இணைந்து எங்கள் காலனி முழுவதும் அனைத்து வீதிகளிலும், செட்டிபாளையம் ரோடு பகுதியிலும் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகிறோம். இது தவிர அனைத்து வீடுகளின் முன் மரங்கள் வளர்க்கப்பட்டு, முறையாக பராமரிக்கப்படுகிறது. இதனால், எந்நேரமும் குளுமையான, இயற்கையான காற்றை நாங்கள் சுவாசிக்க முடிகிறது.

இந்த காலனி பகுதிக்குள் எந்த அரசியல் நிகழ்ச்சிகளுக்கு 'நோ என்ட்ரி' தான். இப்பகுதியில் எந்த வீட்டிலும், அரசியல் கட்சிகளின் கொடி, போஸ்டர், ஸ்டிக்கர் என எதற்கும் அனுமதியில்லை. அதே போல் எந்த வீதியிலும் இதற்கு அனுமதியில்லை. அரசியல் பிரசாரம், கூட்டம் உள்ளிட்ட எந்த நிகழ்வும் எங்கள் பகுதிக்குள் ஆரம்ப காலம் முதலே இல்லை. இதனால், ஒரு சுமூகமான சூழலே எங்கள் மத்தியில் நிலவுகிறது என்பதை மறுக்க முடியாது.

நலச்சங்கம் சார்பில் 12 இடங்களில் 'சிசிடிவி' கேமராக்கள் அமைக்கப்பட்டு சங்க அலுவலகத்தில் பதிவுகள் கண்காணிக்கப்படுகிறது. குடியிருப்பு பகுதி அமைந்த போதே எங்கள் ஏற்பாட்டில் தெரு விளக்குகள் பொருத்த ஏற்பாடு செய்தோம். தற்போது அனைத்து பகுதியிலும் தேவையான அளவு தெரு விளக்குகள் உள்ளன. வீடுகள் தோறும் குப்பைகளை முறையாக ஊழியர்கள் வந்து பெற்றுச் செல்கின்றனர். வீதிகளில் எங்கும் குப்பைகள் வீசப்படுவதில்லை. துாய்மை முறையாகப் பராமரிக்கப்படுகிறது.

கழிவுநீரால் அவதி


எங்கள் பகுதியின் தேவை என்று பார்த்தால், பாதாள சாக்கடை திட்டம் ஏற்படுத்த வேண்டும். இங்கு எந்த வீதியிலும் மழை நீர் மற்றும் கழிவு நீர் வடிகால் அமைப்பு இல்லை. பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டால் எங்கள் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும். தற்போது அனைத்து வீடுகளிலும் குழி ஏற்படுத்தி தான் கழிவு நீரை விட்டு வருகிறோம். குழிகள் நிரம்பி வழிகிறது. வாரம்தோறும் சுழற்சி அடிப்படையில், மாநகராட்சி லாரி மூலம் கழிவு நீர் அகற்றப்படுகிறது. பாதாள சாக்கடை திட்டம் அருகேயுள்ள செவந்தாம்பாளையம் பகுதியில் கொண்டு வரப்பட்டுள்ளது. எங்கள் பகுதியை அத்துடன் இணைக்கலாம்.

ஆலை கழிவுகள்


இது தவிர செட்டிபாளையம் ரோட்டில் சிலர் தொழிற்சாலை கழிவுகளைக் கொட்டி விடுகின்றனர். அதிகளவில் இது சேர்ந்த நிலையில் அதனை நாங்களே அகற்றினோம். அந்த ரோட்டில் தான் எங்கள் பகுதியினர் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர்.

இங்கு குப்பை கொட்டுவது தவிர்க்கப்பட வேண்டும். செவந்தாம்பாளையம் செல்லும் ரோடு சிறிது தொலைவுக்கு மண் ரோடாக உள்ளது. இதை தார் ரோடாக மாற்றினால் போக்குவரத்துக்கு எளிதாக இருக்கும்.

அதேபோல் எங்கள் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு செவந்தாம்பாளையம் மற்றும் செட்டிபாளையம் பகுதியில் ஓட்டுகள் இடம் பெற்றுள்ளது. பல்லடம் எம்.எல்.ஏ., கோவை எம்.பி., என மக்கள் பிரதிநிதிகள் எங்கள் பகுதியே தெரியாமல் உள்ளனர். எங்கள் பகுதி ஓட்டுகள் அனைத்தும் தெற்கு தொகுதி, திருப்பூர் லோக்சபா தொகுதிக்கு மாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us