/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எம்.எல்.ஏ., செல்வராஜ் இல்ல திருமணம் மணமக்களை வாழ்த்திய முதல்வர்
/
எம்.எல்.ஏ., செல்வராஜ் இல்ல திருமணம் மணமக்களை வாழ்த்திய முதல்வர்
எம்.எல்.ஏ., செல்வராஜ் இல்ல திருமணம் மணமக்களை வாழ்த்திய முதல்வர்
எம்.எல்.ஏ., செல்வராஜ் இல்ல திருமணம் மணமக்களை வாழ்த்திய முதல்வர்
ADDED : ஜூன் 12, 2025 12:34 AM

திருப்பூர் : திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜின் இல்ல திருமண வரவேற்பில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினார்.
தி.மு.க., திருப்பூர் மத்திய மாவட்ட செயலாளரும், திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான செல்வராஜ் மகள் செந்தமிழ் - யோகேஸ் கண்ணா திருமண வரவேற்பு விழா, கோவை- - சேலம் பைபாஸ் சாலை, செங்கப்பள்ளியில் உள்ள சொர்ண மஹாலில் நேற்று காலை நடந்தது. இதில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். மணமக்கள் முதல்வர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர். முன்னதாக முதல்வரை, எம்.எல்.ஏ., செல்வராஜ் மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர்.
அமைச்சர்கள் முத்துசாமி, வேலு, பன்னீர்செல்வம், சாமிநாதன், மனோதங்கராஜ், கயல்விழி, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சபரீசன், மேயர் தினேஷ்குமார், திருப்பூர் வடக்கு மாநகர தி.மு.க., பொறுப்பாளர் தங்கராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.