/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆதிதிராவிடர், பழங்குடியினருக்காக 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்
/
ஆதிதிராவிடர், பழங்குடியினருக்காக 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்
ஆதிதிராவிடர், பழங்குடியினருக்காக 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்
ஆதிதிராவிடர், பழங்குடியினருக்காக 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்
ADDED : ஜன 19, 2025 02:50 AM
திருப்பூர்:தமிழக அரசு சார்பில், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உடனுக்குடன் தீர்வு காணும் வகையில், 'மக்களுடன் முதல்வர்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் முதல் கட்டமாக, மாநிலம் முழுதும் உள்ள நகர உள்ளாட்சிகளில் முகாம் நடத்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக, ஊரகப்பகுதியில் முகாம் நடத்தப்பட்டது. மக்களிடம் பெற்ற மனுக்களை பரிசீலித்து, உரிய தீர்வு காணப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்காக, மூன்றாம் கட்ட முகாம் நடத்த அரசு ஏற்பாடு செய்துள்ளது. தமிழகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அதிகம் வசிக்கும், 24 மாவட்டங்களில் உள்ள, 184 தாலுகாக்களை தேர்வு செய்து, 1,270 முகாம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளை ஒருங்கிணைத்து முகாம் நடைபெற உள்ளது.
வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகள் கண்டறிப்பட்டு, மூன்றாம் கட்டமாக, மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கம்ப்யூட்டர், இணையதள வாடகை செலவுக்காக, 45.33 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அண்ணா மறுமலர்ச்சி திட்டம், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை, குறைதீர்ப்பு மேலாண்மை திட்ட நிதிகளை கொண்டு, மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் செலவுகளை ஈடுகட்ட உத்தரவிடப்பட்டுள்ளது' என்றார்.