ADDED : ஆக 22, 2025 11:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: திருப்பூர் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி, வரும், 25ம் தேதி துவங்குகிறது.
மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கூறுகையில், 'முதல்வர் கோப்பைக்கான மாவட்ட மற்றும் மண்டல அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டி, வரும், 25ம் தேதி துவங்கி, அடுத்த மாதம், 10ம் தேதி வரை நடக்கிறது.
இதில், 12 முதல், 19 வயது வரையுள்ள பள்ளி மாணவ, மாணவியர்; 17 முதல், 25 வயது வரையுள்ள கல்லுாரி மாணவ, மாணவியர்; 15 முதல், 35 வயது வரையுள்ள பொதுப்பிரிவினர் மற்றும் அனைத்து வயது அரசு ஊழியர், மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது' என்றார்.