ADDED : ஆக 30, 2025 12:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; மாவட்ட அளவில் முதல்வர் கோப்பைக்கான கூடைப்பந்து போட்டி நேற்று நடந்தது. குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ரியாஸ் அகமது, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ரகுகுமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் ஆகியோர் போட்டிகளைத் துவங்கி வைத்தனர்.
நஞ்சப்பா மெட்ரிக் பள்ளியில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான போட்டியில் 36 அணிகள் பங்கேற்றன.
ஜெய்வாபாய் மெட்ரிக் பள்ளியில் நடந்த பள்ளி மாணவிகளுக்கான போட்டியில் 26 அணிகள் பங்கேற்றன.
ஹாக்கி போட்டி சிக்கண்ணா அரசு கல்லுாரியில், முதல்வர் கோப்பைக்கான காலிறுதி ஹாக்கி போட்டி நேற்று நடந்தது. பள்ளி அளவில், மாணவர்களுக்கான போட்டியில் 25 அணிகளும், மாணவிகளுக்கான போட்டியில் 21 அணிகளும் பங்கேற்றன. கல்லுாரி அளவில் 4 அணிகள் மாணவர்களும், 5 அணிகள் மாணவிகளும் பங்கேற்றன.