/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநில இளைஞர் திருவிழாவில் சிறப்பு சேர்க்கும் 'சிக்கண்ணா'
/
மாநில இளைஞர் திருவிழாவில் சிறப்பு சேர்க்கும் 'சிக்கண்ணா'
மாநில இளைஞர் திருவிழாவில் சிறப்பு சேர்க்கும் 'சிக்கண்ணா'
மாநில இளைஞர் திருவிழாவில் சிறப்பு சேர்க்கும் 'சிக்கண்ணா'
ADDED : அக் 23, 2025 12:43 AM

திருப்பூர்: இன்று துவங்க உள்ள மாநில இளைஞர் திருவிழாவில், சிக்கண்ணா கல்லுாரி மாணவர் ஒருவரும், மாணவி ஒருவரும் பங்கேற்க தேர்வு பெற்றுள்ளனர். பாரதியார் பல்கலை அணியை இக்கல்லுாரியின் என்.எஸ்.எஸ்., அலகு 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் தலைமையேற்று அழைத்துச் செல்கிறார்.
மாநில இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சகம், என்.எஸ்.எஸ்., சார்பில், சென்னையில் உள்ள வி.ஐ.டி. பல்கலையில், இன்று துவங்கி, (23ம் தேதி), 27ம் தேதி வரை, மாநில அளவிலான இளைஞர் திருவிழா நடைபெற உள்ளது.
முகாமில், மாநிலத்தில் உள்ள பல்வேறு பல்கலையில் இருந்தும், 230 என்.எஸ்.எஸ்., மாணவ, மாணவியர் பங்கேற்க உள்ளனர். ஆவணப்படம் எடுத்தல், நாடகம், மவுன நாடக உருவாக்கம் உள்ளிட்ட பயிற்சிப் பட்டறை, பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. ஒவ்வொரு பல்கலை., சார்பிலும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.
கோவை பாரதியார் பல்கலையில் இருந்து, தலா, 5 மாணவ, மாணவியர் வீதம், 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு -2 சார்பில், வணிகவியல் துறை மாணவர் ராஜன் எட்வர்ட், கணிதவியல் துறை மாணவி பிரியங்கா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பல்கலை அணியை, சிக்கண்ணா கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் தலைமையேற்று அழைத்து செல்கிறார். ஆசிரியர் மற்றும் மாணவர்களை கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்தி வழியனுப்பினர்.