/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிக்கண்ணா மாணவர்கள் மலையேற்றத்தில் அசத்தல்
/
சிக்கண்ணா மாணவர்கள் மலையேற்றத்தில் அசத்தல்
ADDED : ஜூலை 21, 2025 11:51 PM

திருப்பூர்; என்.சி.சி., சார்பில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற இடத்தில், சிறப்பு சாகச மலையேற்றப்பயிற்சி முகாம் நடந்தது.
மாணவர் பிரிவில், நாடு முழுக்க இருந்து, 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில், திருப்பூர் சிக்கண்ணா கலை கல்லுாரியில், பொருளியல், 3ம் ஆண்டு படித்து வரும், என்.சி.சி., மாணவர் கார்த்திக்சரண் பங்கேற்றார்.
இப்பயிற்சியின் வாயிலாக ஏழு மலைகளை ஏறியுள்ளார். அதிகபட்சம், 7,600 அடி வரை ஏறி, தனது திறமையை காண்பித்துள்ளார்.
அதே போன்று, இமாச்சல பிரதேசம், மணாலியில் நடந்த அடிப்படை மலையேறும் பயிற்சி முகாமில், நாடு முழுக்க இருந்து, 100 மாணவியர் பங்கேற்றனர்.
இதில், கல்லுாரி, விலங்கியல் துறை மூன்றாமாண்டு, என்.சி.சி., மாணவி பவித்ரா பங்கேற்று, 14 மலைகள் ஏறியுள்ளார். அதிகபட்சம், 16 ஆயிரத்து 700 அடி வரை ஏறி, அசத்தியுள்ளார்.
மலையேற்றத்தில் சாகசம் புரிந்து திரும்பிய மாணவ, மாணவியரை கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், என்.சி.சி., அதிகாரி மேஜர் கனகராஜ், கல்லுாரி பேராசிரியர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் வாழ்த்தினர்.