/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழந்தை கடத்தல் வதந்தி; தபால் ஊழியர் சிக்கினார்
/
குழந்தை கடத்தல் வதந்தி; தபால் ஊழியர் சிக்கினார்
ADDED : மார் 16, 2024 11:26 PM
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே மூலனுாரில் நேற்று முன்தினம் சமூக வலைதளங்களில் குழந்தை கடத்தலில் ஈடுபடும் நபர் எனக்கூறி, மதுபோதையில் இருந்த வடமாநில வாலிபரை பொதுமக்கள் தாக்கிய வீடியோ பகிரப்பட்டு வந்தது.
திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரித்தனர். தவறான வீடியோவை மக்கள் மத்தியில் பகிர்ந்து, வதந்தி பரப்பி பதட்டத்தை ஏற்படுத்தியது தெரிந்தது. தனிப்படை போலீசார் விசாரித்ததில், வீடியோவை பகிர்ந்த மூலனுாரில், தற்காலிக தபால் ஊழியராக பணிபுரியும் அறிவழகன், 34, என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
பொதுமக்கள் இதுபோன்ற வதந்திகளை, அதன் உண்மை தன்மை பற்றி அறியாமல் சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் எனவும், அவ்வாறு பகிர்ந்தால் சைபர் கிரைம் நடவடிக்கைக்கு ஆளாவீர் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

