/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பக்கெட் தண்ணீரில் மூழ்கி குழந்தை பலி
/
பக்கெட் தண்ணீரில் மூழ்கி குழந்தை பலி
ADDED : ஜூலை 27, 2025 01:03 AM
திருப்பூர்:திருப்பூரில், பக்கெட் தண்ணீருக்குள் மூழ்கி, ஒன்றரை வயது குழந்தை இறந்தது.
திருப்பூர், கோம்பை தோட்டத்தை சேர்ந்தவர் சத்யபிரியா, 24. இவருக்கு, இரண்டாண்டுக்கு முன், தேனியை சேர்ந்த மருதுபாண்டி என்பவருடன் திருமணம் நடந்தது. தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கர்ப்பிணியாக இருந்த போது, கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு திரும்பினார். குழந்தை பிறந்தது. சமீபத்தில் வேலுாரை சேர்ந்த விக்னேஷ், 29, என்பவரை காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் இரண்டாவது திருமணம் செய்தார்.
நேற்று சத்யபிரியா, தன் ஒன்றரை வயது குழந்தையுடன் பொன்னம்மாள் லே-அவுட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். சத்யபிரியா வீட்டில் துாங்கி கொண்டிருந்த போது, குழந்தை, அங்கிருந்த உறவினர் குழந்தையுடன் விளையாடி கொண்டிருந்தது. திடீரென மாயமானது. குழந்தையை தேடினர்.
குளியலறையில் இருந்த பிளாஸ்டிக் பக்கெட் தண்ணீருக்குள் குழந்தை மூழ்கி இறந்தது. திருப்பூர் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
அதே போல, திருப்பூர், மணியகாரம்பாளையத்தை சேர்ந்தவர்கள் விஜய் - சுடர்மணி. தம்பதியின், ஒன்றரை மாத பெண் குழந்தைக்கு, நேற்று திருப்பூர் அரசு மருத்துவமனையில், தடுப்பூசி செலுத்தினர். குழந்தைக்கு காய்ச்சல் வந்தது. அப்போது, மூச்சுத்திணறி குழந்தை இறந்தது. நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

