ADDED : நவ 01, 2024 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊதியூரை சேர்ந்தவர் சோமியன், 28; கட்டட தொழிலாளி.
மனைவி சவுமியா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். இரண்டு வயது குழந்தை இனியா வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் காணவில்லை. தண்ணீர் தொட்டியை பார்த்த போது குழந்தை மிதந்தபடி இருந்தது. உடனே குழந்தையை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

