/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறார் திரைப்பட போட்டி: மாணவியருக்கு பாராட்டு
/
சிறார் திரைப்பட போட்டி: மாணவியருக்கு பாராட்டு
ADDED : பிப் 18, 2025 10:06 PM
உடுமலை; உடுமலை வட்டார அளவில் நடந்த, சிறார் திரைப்பட போட்டியில் பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் வெற்றி பெற்றுள்ளனர்.
உடுமலை அருகே, போடிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், வட்டார அளவிலான சிறார் திரைப்பட போட்டி நடந்தது. இப்போட்டியில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பங்கேற்றனர்.
மாணவர்களுக்கு கதை வசனம் எழுதுதல், ஒளிப்பதிவு மற்றும் நடிப்பு உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடந்தது.
அதில் பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச்சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு மாணவியர் ஒளிப்பதிவு மற்றும் கதை வசனம் எழுதும் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவியர், மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். மாணவியர் மற்றும் பயிற்சி ஆசிரியர் மரகதம் உள்ளிட்டோரை பள்ளி தலைமையாசிரியர் விஜயா, ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழுவினர் பாராட்டினர்.

