/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழந்தை பாதுகாப்பு திட்ட முதிர்வுத்தொகை; 55 பேர் விண்ணப்பம்
/
குழந்தை பாதுகாப்பு திட்ட முதிர்வுத்தொகை; 55 பேர் விண்ணப்பம்
குழந்தை பாதுகாப்பு திட்ட முதிர்வுத்தொகை; 55 பேர் விண்ணப்பம்
குழந்தை பாதுகாப்பு திட்ட முதிர்வுத்தொகை; 55 பேர் விண்ணப்பம்
ADDED : ஜன 09, 2025 12:09 AM

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வுத்தொகை பெறுவதற்கான சிறப்பு முகாம், கலெக்டர் அலுவலக தரைதளத்திலுள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் நேற்று துவங்கியது. மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதா தேவி முகாமை துவக்கிவைத்தார்.
சேமிப்பு பத்திரம், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்று, மாற்றுச்சான்றிதழ், ஆதார் கார்டு, வங்கி பாஸ்புக் நகல், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன், முதிர்வுத்தொகைக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெண்கள் தங்கள் பெற்றோருடன் வந்து, உரிய ஆவணங்களை இணைத்து, விண்ணப்பம் அளித்துவருகின்றனர். நேற்றைய முகாமில், 55 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
''குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெறுவதற்கு, பெண் குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். உரிய ஆவணங்களுடன், முதிர்வுத்தொகைக்கு விண்ணப்பிக்கலம்,'' என, சமூக நல அலுவலர் ரஞ்சிதாதேவி கூறினார்.