/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; தொழிலாளி மீது 'போக்சோ'
/
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; தொழிலாளி மீது 'போக்சோ'
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; தொழிலாளி மீது 'போக்சோ'
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; தொழிலாளி மீது 'போக்சோ'
ADDED : ஜூன் 28, 2025 12:13 AM

அவிநாசி; கள்ளக்குறிச்சி, கரடிசித்துார் பகுதியைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் வெங்கடேஷ், 33, என்பவர், அவிநாசி பகுதியில், வீடு வாடகைக்கு எடுத்து தங்கி, கட்டட வேலைக்கு சென்று வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, 14 வயது சிறுமியை வீட்டிற்குள் அழைத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமி கத்தி கூச்சலிடவே, அருகில் வசிப்பவர்கள், சிறுமியை மீட்டு அவிநாசி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
அவிநாசி அனைத்து மகளிர் போலீசார், சிறுமியிடம் விசாரித்ததில் வெங்கடேஷ் பாலியல் தொந்தரவு அளித்தது தெரியவந்தது. வெங்கடேஷை, 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், ஜே.எம்., கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.