/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளிக்கு வராத குழந்தைகள்; ஜீப்பில் அழைத்து வந்த அதிகாரிகள்
/
பள்ளிக்கு வராத குழந்தைகள்; ஜீப்பில் அழைத்து வந்த அதிகாரிகள்
பள்ளிக்கு வராத குழந்தைகள்; ஜீப்பில் அழைத்து வந்த அதிகாரிகள்
பள்ளிக்கு வராத குழந்தைகள்; ஜீப்பில் அழைத்து வந்த அதிகாரிகள்
ADDED : நவ 13, 2024 12:31 PM

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பள்ளிக்கு வராத நரிக்குறவர் சமூக குழந்தைகளை, அரசு அதிகாரிகள் நேரில் சென்று விசாரித்து ஜீப்பில் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, அறிவொளி நகர் பகுதியில், நரிக்குறவர் இனத்தை சேர்ந்த, 140 குடும்பங்கள் வசிக்கின்றன. இக்குடும்பங்களில் உள்ள, 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளி செல்லாமல் வீட்டில் முடங்கி கிடந்தனர்.
இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து, கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவின் பேரில், பள்ளிக்கல்வி, வருவாய் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கி, பள்ளி செல்லா குழந்தைகளை, அரசு ஜீப்பில் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.