/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்
/
குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்
ADDED : நவ 14, 2024 11:37 PM

திருப்பூரில் உள்ள பல்வேறு பள்ளிகளில் குழந்தைகள் தின விழா விமரிசையாக நடைபெற்றது.
திருப்பூர், காந்திநகர் ஏ.வி.பி., பள்ளியில் நடந்த விழாவில் குழந்தைகளை மகிழ்வித்த ஆசிரியைகள். நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். பள்ளியின் பொருளாளர் லதா, பள்ளி முதல்வர் டயானா, ஒருங்கிணைப்பாளர்கள் மோகனா, வித்யா, ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
மங்கலம், கதிரவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், குழந்தைகள், தேசத் தலைவர்களின் வேடமணிந்து, கவிதை, பேச்சு, ஆடல், பாடல், நாடகம் என தங்களின் பன்முக தன்மையை வெளிக்காட்டினர்.
திருப்பூர், அம்மாபாளையம் ஸ்மார்ட் மாடர்ன் சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஆசிரியர்களின் கலை நிகழ்ச்சிகளுடன், மாணவ, மாணவியரின் வயது வாரியாக, ஸ்மார்ட் பிரீமியர் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
திருப்பூர், கூலிபாளையம் விகாஸ் வித்யாலயா பள்ளியில் நடந்த விழாவுக்கு, தாளாளர் ஆண்டவர் ராமசாமி தலைமை வகித்தார். பள்ளியின் பெருளாளர் ராதா ராமசாமி, துணை செயலாளர் சிவப்பிரியா மாதேஸ்வரன், பள்ளி முதல்வர் அனிதா உட்பட பலர் பங்கேற்றனர்.
பெருமாநல்லுார், கே.எம்.சி., சீனியர் பப்ளிக் செகண்டரி பள்ளியில் நடந்த குழந்தைகள் தின விழாவுக்கு, பள்ளி தலைவர் சண்முகம், லோகநாயகி முன்னிலை வகித்தனர். பள்ளி தாளாளர் மனோகரன், தலைமை வகித்து பேசினார். பள்ளி தலைமை செயல் அதிகாரி சுவஸ்திகா பேசினார்.