/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறார் திரைப்படம் மன்ற செயல்பாடு
/
சிறார் திரைப்படம் மன்ற செயல்பாடு
ADDED : ஆக 22, 2025 11:50 PM
உடுமலை: உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவியருக்கு 'தி ஒயிட் பலுான்' திரைப்படம் திரையிடப்பட்டது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், சமூக நீதி, சமத்துவம், அறிவியல் பார்வை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ள திரைப்படங்கள், கல்வித்துறையின் அறிவிப்பையொட்டி திரையிடப்படுகின்றன.
நடப்பு கல்வியாண்டிலும், இம்மன்ற செயல்பாடு துவங்கியுள்ளது. உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 'தி ஒயிட் பலுான்' என்ற சிறார் திரைப்படம் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவியருக்கு திரையிடப்பட்டது. பள்ளித்தலைமையாசிரியர் விஜயா தலைமை வகித்தார். தமிழாசிரியர் ராஜேந்திரன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.