/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறார் திரைப்பட மன்ற சிறப்பு நிகழ்ச்சி
/
சிறார் திரைப்பட மன்ற சிறப்பு நிகழ்ச்சி
ADDED : நவ 14, 2024 08:54 PM
உடுமலை; உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், குழந்தைகள் திரைப்பட மன்ற சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, திரைப்பட மன்றம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மன்றத்தின் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறையின் அறிவுறுத்தல் படி, திரைப்பட விமர்சனங்கள், திரைக்கதை எழுதுதல், நடிப்பு அல்லது திரைப்பட தயாரிப்பு வாயிலாக, மாணவர்கள் தங்களின் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இதன் ஒரு பகுதியாக 'டாப் 10' என்ற தலைப்பில், குழந்தைகள் தயாரித்த திரைப்படம் திரையிடப்பட்டது. பள்ளி உதவி தலைமையாசிரியர் ஜெயராஜ் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பள்ளி சிறார் திரைப்பட மன்ற பொறுப்பாசிரியர் ராஜேந்திரன் செய்திருந்தார்.