/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீசித்ரகுப்தர் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா
/
ஸ்ரீசித்ரகுப்தர் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா
ADDED : மே 04, 2025 12:28 AM
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி சின்னாண்டிபாளையம் பகுதியில் உள்ள சித்ரகுப்தர் கோவில் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும், சித்ரா பவுர்ணமி விழா கோலாகலமாக கொண்டாடப்படும்.
அதன்படி, 96 ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா, 12ம் தேதி நடக்க உள்ளது. வரும், 10ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, பளக்கொடி கும்மி கலைக்குழுவின் கும்மியாட்ட நிகழ்ச்சி நடக்கிறது. 11ம் தேதி மாலை, 5:00 மணிக்கு, விநாயகர் பூஜை, சங்கல்பம், புண்யாஹம், சித்ரகுப்தர் உற்சவர் சப்பரத்தில் திருவீதியுலா, பால்குட ஊர்வலம், பால் அபிேஷகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடக்கிறது.
வரும், 12ம் தேதி அதிகாலை, 4:30 மணி முதல், சித்தி விநாயகர் மற்றும் ஸ்ரீசித்ரகுப்தர் கலச ஆவாஹனம், சிறப்பு யாகம், பூர்ணாகுதி, மகா அபிேஷகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடக்க உள்ளது. அதனை தொடர்ந்து, சித்ரகுப்தர் கதை வாசிப்பும், அன்னதானம் துவக்கி வைக்கும் நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. விழாவில், கூனம்பட்டி திருமடம் ஸ்ரீநடராஜ சுவாமி, அருளாசி வழங்குகிறார்.
நவக்கிரகங்களின், கேதுவின் அதிதேவதை சித்ரகுப்தர். எனவே, கேது திசை, கேது புத்தி நடப்பில் உள்ளவர்களும், சித்திரை மாதம் பிறந்தவர்களும் சிறப்பு வழிபாடு செய்யலாம் என, கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

