/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சித்ரா பவுர்ணமி இன்று திருக்கல்யாண உற்சவம்
/
சித்ரா பவுர்ணமி இன்று திருக்கல்யாண உற்சவம்
ADDED : மே 11, 2025 11:49 PM
உடுமலை; உடுமலையில் புகழ்பெற்ற பிரசன்ன விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா நடக்கிறது. இதையொட்டி, கோவிலில், காலை, 7:00 மணிக்கு மேல், 8:00 மணிக்குள் ஸ்ரீ விசாலாட்சி அம்பாளுக்கு மகா அபிேஷகம், காலை, 8:30 மணிக்கு மேல் சிறப்பு அலங்காரம், விசேஷ பூஜை, மஹா தீபாராதனையும், காலை, 10:30 மணிக்கு மேல், திருக்கல்யாண உற்சவம், மதியம் விசேஷ பூஜை, அலங்காரம், மஹா தீபாராதனைக்கு பிறகு அன்னதானம் வழங்கப்படுகிறது.
மாலை, 6:30 மணிக்கு மேல் அம்பாள் திருவீதி உலா நடக்கிறது. இந்நிகழ்ச்சியில், உடுமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
* உடுமலை ராயல் லட்சுமி நகரில் ஸ்ரீ ராஜ விநாயகர், ஸ்ரீ ராஜ லலிதாம்பிகா சமேத ஸ்ரீ ராஜலிங்கேஷ்வர சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், சித்ரா பவுர்ணமியையொட்டி காலை, 10:00 மணிக்கு சிறப்பு அபிேஷக, அலங்காரம் ஆராதனை, நடைபெற உள்ளது.