/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேவாலயங்களில் குறுத்தோலை ஞாயிறு கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்பு
/
தேவாலயங்களில் குறுத்தோலை ஞாயிறு கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்பு
தேவாலயங்களில் குறுத்தோலை ஞாயிறு கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்பு
தேவாலயங்களில் குறுத்தோலை ஞாயிறு கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்பு
ADDED : ஏப் 14, 2025 05:59 AM

வால்பாறை தேவாலயங்களில் குறுத்தோலை ஞாயிறு நிகழ்ச்சி நடைபெற்றது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்ததை நினைவு கூறும் வகையில், 40 நாட்கள் விரதமிருந்து தவக்காலம் கிறிஸ்தவர்கள் மேற்கொள்கின்றனர்.
தவக்காலம் துவங்கிய நாளில் இருந்து, வால்பாறை திரு இருதய தேவாலயத்தில் ஆலயபங்கு தந்தை ஜெகன்ஆண்டனி தலைமையில், ஒவ்வொரு நாளும் திருப்பலியும், திவ்யநற்கருணை ஆராதனை வழிபாடும் நடந்தது.
இந்நிலையில், வால்பாறை திருஇருதய தேவாலயத்தில், நேற்று காலை குறுத்தோலை ஞாயிறை முன்னிட்டு, தென்னை குறுத்தோலைகளை கையில் ஏந்தியவாறு, ஜெபவழிபாடு நடத்தினர்.
இதே போல் வால்பாறை சி.எஸ்.ஐ., தேவாலயம், கருமலை வேளாங்கண்ணி மாதா ஆலயம், ரொட்டிக்கடை புனித வனத்துசின்னப்பர் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில், இதையொட்டி, கிறிஸ்தவர்கள், நகரின் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்று, ஆலயங்களை சென்றடைந்தனர்.
பின் தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி செய்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி
புனித வெள்ளியை, கிறிஸ்தவர்கள் நோன்பாகவும், இந்த வாரத்தை, புனித வாரமாக கடைப்பிடிக்கின்றனர். அவ்வகையில், நேற்று, முதல் நிகழ்வான குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சி பொள்ளாச்சியில் நடந்தது. பொள்ளாச்சி புனித லுார்து அன்னை ஆலய பங்கு தந்தை ரெவரன்ட் பாதர் ஜேக்கப் அடிகளார் தலைமையில், புனித லுார்து அன்னை பள்ளி வளாகத்தில் இருந்து, அருகில் உள்ள பாலக்காடு ரோடு புனித லுார்து அன்னை ஆலயம் வரை கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள், தங்களது கைகளில் குருத்தோலை ஏந்தி குருவானவர் முன்னே செல்ல, அனைவரும் பக்தி பாடல்களை பாடிக்கொண்டு பவனியாக ஆலயத்துக்கு சென்றனர்.
ஆலயத்தில், குருத்தோலை ஞாயிறு சிறப்பு பிரார்த்தனை, ஆராதனை வழிபாடுகள் நடைபெற்றன. இந்த வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுவதால், (பாதம் கழுவும் சடங்கு, சிலுவைப்பாதை, இயேசு மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழும் புனித வெள்ளி வரை அனைத்து நாட்களிலும் சிறப்பு ஆராதனை வழிபாடுகள் நடைபெறுகிறது.

