/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஸ் ஸ்டாண்ட் எதிரில் சினிமா ஷூட்டிங்; போக்குவரத்து நெரிசல்; மக்கள் தவிப்பு

ADDED : பிப் 15, 2024 12:00 AM

பல்லடம் : பல்லடம் பஸ் ஸ்டாண்ட் எதிரே சினிமா சூட்டிங் நடந்ததால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பஸ் ஸ்டாண்ட் எதிரே, நேற்று 'வயலன்ஸ்' என்ற புதிய திரைப்பட ஷூட்டிங் நடந்தது. முன்னதாக, அங்குள்ள பேக்கரி ஒன்றில், நேற்று காலை முதல் துவங்கிய சூட்டிங்கை வேடிக்கை பார்க்க பொதுமக்கள் பலரும் அங்கு கூடினர். தேவையற்ற நெரிசலுடன், விபத்து அபாயமும் ஏற்பட்டு வந்தது. போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்க, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், கூட்டத்தை பார்த்தபடியே சென்றனர்.
ஒரே காட்சி மீண்டும் மீண்டும் ஒத்திகை பார்க்கப்பட்டு வந்த நிலையில், தேவையற்ற பதட்டம் நிலவியது. போக்குவரத்து நிறைந்த பல்லடம் தேசிய நெடுஞ்சாலையில், தினசரி வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதுபோன்ற சினிமா ஷூட்டிங் நடத்தப்படுவது, விபத்துகளுக்கு மேலும் காரணமாக அமைந்து விடும்.