/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வகுப்பறை, ஆய்வக கட்டடம் பள்ளிகளில் கட்டுமானப் பணி
/
வகுப்பறை, ஆய்வக கட்டடம் பள்ளிகளில் கட்டுமானப் பணி
வகுப்பறை, ஆய்வக கட்டடம் பள்ளிகளில் கட்டுமானப் பணி
வகுப்பறை, ஆய்வக கட்டடம் பள்ளிகளில் கட்டுமானப் பணி
ADDED : டிச 18, 2025 08:02 AM
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், 16 பள்ளிகளில், மொத்தம் ரூ.20.87 கோடி மதிப்பீட்டில், புதிய வகுப்பறை மற்றும் ஆய்வக கட்டடங்கள் கட்டுமான பணி துவக்கிவைக்கப்பட்டது.
திருப்பூர், அ.செட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார். மேயர் தினேஷ்குமார் முன்னிலைவகித்தார். மும்மூர்த்தி நகர் அரசு நடுநிலைப்பள்ளிக்கு 3 வகுப்பறை மற்றும் ஒரு ஆய்வகம்; கருமாரம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் 6 வகுப்பறை மற்றும் ஒரு ஆய்வகம்; ப.வடுகபாளையம் தொடக்கப்பள்ளியில், 2 வகுப்பறை.
பாரதி நகர் அரசு நடுநிலைப்பள்ளி, 15 வேலம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி, ஆண்டிபாளையம் பள்ளி, போயம்பாளையம் பள்ளி, நல்லுார் அரசு நடுநிலைப்பள்ளி, அ.செட்டிபாளையம் பள்ளி உள்பட 16 பள்ளிகளில், புதிய கட்டடங்கள் கட்டுமான பணிகளை, அமைச்சர் சாமிநாதன் துவக்கிவைத்தார்.

